ஒரு நபர் கமிஷன்

ஒரு முழு நேர எழுத்தாளனாக இருப்பதில் எழுத்து-வருமானத்துக்கு அப்பால் வேறு சில அசௌகரியங்கள் இருக்கின்றன. நானாக யாரிடமும் சென்று எப்போதும் பேசுவதில்லை என்றாலும் வம்படியாக வந்து பேசுவோருக்கு பதில் சொல்ல வேண்டியதாகிவிடுகிறது. கடந்த வாரம் ஒரு நாள் காலை நடைப் பயிற்சியின்போது (அன்றைக்குப் பார்த்து எட்டரைக்கு நடக்கச் சென்றேன்.) ஒருவர் வேகவேகமாக அருகே வந்து வணக்கம் சொன்னார். ‘சார், அன்னிக்கு ஒரு நாள் ஆபீஸ் போயிட்டிருக்கேன்னு சொன்னிங்களே…’ ‘ஆமா?’ ‘இன்னிக்கு வியாழன் தானே? லீவு போட்டுட்டிங்களா?’ ‘அது … Continue reading ஒரு நபர் கமிஷன்